Home » உலகச் செய்திகள் » சமூகவலைதளங்களால் ரோகிங்கிய கலவரம் கொடூரமாக நடைபெற்றது-அய்.நா

சமூகவலைதளங்களால் ரோகிங்கிய கலவரம் கொடூரமாக நடைபெற்றது-அய்.நா

மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலையில் சமூகவலைதளமான ஃபேஸ்புக் சமூகவலைதளத்துக்கு முக்கிப்பங்கு உள்ளதாக அய்க்கிய நாட்கள் மனித உரிமை நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

👤 Saravana Rajendran14 March 2018 11:39 PM GMT
சமூகவலைதளங்களால் ரோகிங்கிய கலவரம் கொடூரமாக நடைபெற்றது-அய்.நா
Share Post

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பவுத்தர்களுக்கும் ரோகிங்யா மக்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மியான்மர் ராணுவத்தினர், ரோகிங்யா மக்களை எதிர்த்துப் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றனர்.
ரோகிங்யா மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரித்துவரும் அய்.நாவின் பன்னாட்டு சுதந்திர விசாரணைக் குழுவின் தலைவர் மர் சூக்கி தருஸ்மன் ஊடகவியலாளர்களிடம் கூறும்போது, மியான்மரில் நடைபெற்ற மத வன்முறைக்கு சமூக ஊடகம் முக்கியப் பாத்திரம் வகித்துள்ளது என்றார்.
அதில், ஃபேஸ்புக் எனும் முகநூல்தான் மிருகத்தனமாக மாறி, மத வன்முறையைத் தூண்டும் விதமாகவே செயல்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சப்பைக் காரணம் கூறிய முகநூல் நிறுவனம் அய்க்கிய நாடுகள் அவையின் இந்த குற்றச்சாட்டை மறுத்த முகநூல் நிறுவனம் ''வெறுப்புஉணர்வைத் தூண்டும் படங்களை ஒருவர் தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொண்டால், அவர்களது, கணக்கை முடக்குவது தொடர்ந்து, பதிவுகளை நீக்கம் செய்வது என அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளது.
தமிழகத்திலும் இந்தியாவின் இதர பகுதிகளும் பெரும்பாண்மை மதவாத அமைப்புகள் தொடர்ந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கி சமூகவலைதளங்களில் பதிந்துகொண்டே வருகிறது, ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக முகநூல் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.