Home » உலகச் செய்திகள் » சவுதி மீது ஏவுகனைத் தாக்குதல் ஒருவர் பலி

சவுதி மீது ஏவுகனைத் தாக்குதல் ஒருவர் பலி

சவுதி தலைநகர் ரியாத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகனையின் சிதறல்விழுந்து சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டவர் மரணமடைந்தார்.

👤 Saravana Rajendran27 March 2018 10:30 PM GMT
சவுதி மீது ஏவுகனைத் தாக்குதல் ஒருவர் பலி
Share Post

ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபியாவிர்கு எதிராக தொடர்தாக்குதலை மேற்கொண்டு வருகிறார்கள். ஏமன் பிரச்சனையில் சவுதி அரபியா தலைமையிலான கூட்டணி படைகள் தலையிட தொடங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று ஆண்டுகள் முடிவடைகிறது, ஹூதி கிளர்ச்சியாளர்கள், ரியாத் விமானநிலையம் உள்ளிட்ட எண்ணற்ற இடங்களை தாங்கள் குறி வைத்ததாக கூறி உள்ளனர். இந்த ஏவுகணைகளை மறித்து சவுதி விமானப்படை தாக்கியது. ஏவுகணையின் உடைந்த துண்டுகள் புறநகரில் விழுந்ததில் எகிப்தியர் ஒருவர் மரணமடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்