Home » உலகச் செய்திகள் » சீனா வந்தாரா வடகொரிய அதிபர்

சீனா வந்தாரா வடகொரிய அதிபர்

வடகொரியாவில் இருந்து மிகவும் பாதுகாப்பான ரகசிய ரயிலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு வருகை தந்ததாக ஊடகசெய்தி வெளியாகியுள்ளது.

👤 Saravana Rajendran27 March 2018 10:38 PM GMT
சீனா வந்தாரா வடகொரிய அதிபர்
Share Post

ஜப்பானிய ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் பலத்த பாதுகாப்பு அடங்கிய ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரயிலில் வந்த நபர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா, வட கொரியாவின் ஒரே முக்கிய கூட்டாளி ஆனால் வட கொரியா அணு அயுத சோதனைகளில் ஈடுபடுவதால் ஏற்பட்ட பதற்றங்களால் இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. பதவியேற்றதிலிருந்து கிம் வட கொரியாவை விட்டு சென்றதில்லை என நம்பப்படுகிறது.இந்த செய்தி குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை. சீனா மற்றும் வட கொரிய அரசு ஊடகங்களிலும் இதுகுறித்த எந்த செய்தியும் இல்லை.