Home » உலகச் செய்திகள் » கிம் ஜோங் உன் கலந்துகொண்ட அரிய இசை நிகழ்ச்சி

கிம் ஜோங் உன் கலந்துகொண்ட அரிய இசை நிகழ்ச்சி

கிழக்காசியாவின் அமைதிக்கு உகந்த சூழல் நிலவுகிறது

👤 Saravana Rajendran2 April 2018 6:33 PM GMT
Share Post

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தென் கொரிய பாப்பிசைப் பாடகர்களின் அரிய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
பத்தாண்டில் முதன்முறையாகத் தென் கொரியக் கலைஞர்கள் பியோங்யாங்கில் இசை நிகழ்ச்சி படைத்தனர். கே பாப் என்ற மகளிர் குழுவும் இதில் அடங்கும்.
இரு கொரியாக்களின் தலைவர்களும் உச்சநிலைக் கூட்டம் நடத்தவிருக்கும்வேளையில், சமரசப் போக்கை வளர்க்கும் முயற்சியாக அது கருதப்படுகிறது.
கிம், முன்னாள் பாடகியான தமது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலைஞர்களுடன் கைகுலுக்கி, புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தென் கொரியக் கலைஞர்களின் நிகழ்ச்சியில் வடகொரியத் தலைவர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதன்முறை. கிம்மின் சகோதரியும் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இசை நிகழ்ச்சியில், 120 கலைஞர்கள் திறன்காட்டினர்.
வடகொரிய தலைநகரில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சமீபகாலமாக வடகொரியாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, தீடீரென்று வடகொரிய அதிபர் சீனா சென்று சீன அதிபரை சந்தித்தது, அதன் பிறகு தென்கொரிய தலைவர்களுடன் கலந்துறையாடியது, தற்போது பாப்பிசை குழுவின் நிகழ்ச்சிக்கு தானே கலந்துகொண்டது போன்றவைகள் கிழக்குஆசியப் பிராந்தியத்தில் நல்ல ஒரு சூழல் நிலவுவதற்கான சான்றுகளாக உள்ளது,