Home » உலகச் செய்திகள் » பகரினில் டாலரைச் சுரக்கும் ஊற்று

பகரினில் டாலரைச் சுரக்கும் ஊற்று

பகரின் நாட்டில் எட்டு ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பகரின் நாட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்கள் வருவாயாக வந்து குவியப்போகிறது

👤 Saravana Rajendran6 April 2018 4:02 AM GMT
பகரினில் டாலரைச் சுரக்கும் ஊற்று
Share Post

வளைகுடா நாடுகளில் ஒன்று பகரின். அதிகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை நம்பியுள்ள இங்கு, கடந்த 1932ம் ஆண்டு முதல் கச்சாஎண்ணெய் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நாளொன்றிற்கு சுமார் 50 ஆயிரம் பீப்பாய் அளவுள்ள கச்சாஎண்ணெய் கிடைக்கிறது. ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர் அளவுள்ளது. இந்தக் கிணறு மட்டுமின்றி அபு சஃபா கச்சாஎண்ணெய் கிணறு மூலமும் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பீப்பாய் அளவுள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இதில், சரிபாதியை சவுதி அரேபியாவுக்கு கொடுக்கும் ஒப்பந்தம் உள்ளது, இதனால் பகரினுக்கு ஏற்கனவே ஆண்டிற்கு பலகோடி மில்லியன் டாலர் வருவாய் நிறந்தரமாக உள்ளது.

. இந்நிலையில், அங்கு புதிய கச்சா எண்ணெய் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முகம்மது பின் கலிபா அறிவித்துள்ளார். இந்தப் புதிய கச்சா எண்ணெய் கிணறானது பகரின் நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் சவுதி அரேபியா அமைந்துள்ள திசையில் உள்ளது.
ஏறக்குறைய 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்தக் கிணற்றில் இருந்து சுமார் 8 ஆயிரம் கோடி பீப்பாய் கச்சாஎண்ணெய் கிடைக்கும் என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அகழாய்வு நிறுவனத்தினர் மதிப்பீடு செய்துள்ளனர். தற்போது உடனடியாக இந்த கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்க இயலாது. அதற்கான அதற்காக கச்சாஎண்ணெய் கிணறு எடுத்தபிறகு அதை பேரல்களில் நிறப்பும் வரை பல்வேறு சுற்றுகளில் எண்ணெய் பயணிக்கவேண்டும், அதற்கான தொழிற்சாலைப் பணிகள் முடிய ஐந்து ஆண்டுகள் ஆகும்.. தொடர்ந்து அந்தக் கிணற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் முடிவடைந்த பின்னரே, அந்தப் புதிய கிணற்றில் இருந்து தினந்தோறும் எத்தனை பீப்பாய் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்க முடியும் என்பது தெரிய வரும்.

இதனால் இனி பகரினில் வருவாய் தற்போது உள்ளதை விட 17 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது