Home » உலகச் செய்திகள் » எறும்பு கடித்து மலையாளப் பெண் சவுதியில் சாவு

எறும்பு கடித்து மலையாளப் பெண் சவுதியில் சாவு

சவுதி அரேபியாவில் நச்சுத்தன்மை கொண்ட எறும்புக் கடித்து கேரளப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

👤 Saravana Rajendran6 April 2018 5:28 AM GMT
எறும்பு கடித்து மலையாளப் பெண் சவுதியில் சாவு
Share Post

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி இவர் தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த சூசியை மிகவும் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த எறும்பு ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் விஷம் பரவி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எறும்பின் நச்சுதன்மையால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சூசி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எறும்பு கடித்து இந்தியப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலைவனப்பகுதியில் உள்ள எறும்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவைகளாக இருக்கின்றனர். இதற்கு காரணம் மிகவும் அரிதாக கிடைக்கும் பூச்சிகளை உடனடியாக சாகடிக்க எறும்புகளின் நச்சுத்தன்மை பயன்படுகிறது,இது மனித நரம்புமண்டலத்தை பாதித்து உடல் இயக்கத்தை செயலிழக்க வைத்துவிடும் சில வகை எறும்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை என்றும், அவை கடித்தால் உயிர் போகும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.