Home » உலகச் செய்திகள் » சிங்கபூரில் நன்கொடை வாங்க லைசென்ஸ்

சிங்கபூரில் நன்கொடை வாங்க லைசென்ஸ்

உரிமம் இல்லாமல் நன்கொடை வாங்கிய 4 இளைஞர்கள் சிங்கபூரில் கைசெய்யப்பட்டுள்ளார்.

👤 Saravana Rajendran8 April 2018 1:59 AM GMT
சிங்கபூரில்  நன்கொடை வாங்க லைசென்ஸ்
Share Post

சிங்கபூரில் சில குடியிறுப்புப் பகுதியில் இளைஞர்கள் சிலர் நன்கொடை கேட்டு வந்ததார்கள். அவர்களின்நடவடிக்கைகளைப் பற்றி சந்தேகம் கொண்ட சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர்களை கைது செய்து விசாரித்தனர்.
இந்த இளைஞர்கள் மார்ச் மாதம் மொபைல் போன்களின் உதிரிப்பாகங்களை அனுமதியின்றி வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்துவந்தனர். பின்னர் நன்கொடை வசூல் என்ற பெயரில் தாங்கள் முன்பு சென்ற பகுதிகளுக்குச் சென்று வசூல் செய்துள்ளனர்.
முன்னாள் சிறைக்கைதிகள் ஆதவற்றவர்களுக்கான உதவிகள் செய்வதாக அவர்கள் காவல்துறையிடம் விசாரணையின் போது கூறினர். ஆனால் இதற்கான உரிமங்கள் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது.
உரிமமின்றி நன்கொடை திரட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் $5,000 அபராதத்துடன் இரண்டு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
சிங்கபூரில் நன்கொடை கேட்டு வருவோரின் உரிமங்களைச் சரிபார்க்க https://www.ncss.gov.sg/Fund-Raising-Permits.aspx அல்லது http://www.charities.gov.sg/Pages/Home/aspx இணையத்தளங்களுக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
79777 என்ற எண்ணுக்கு "FR<space><licence/certificate number or organization name>" என்ற வகையில் குறுந்தகவல் அனுப்பியும், நன்கொடை கேட்டு வருவோரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கலாம்.
சிங்கபூர் போன்ற நாடுகளில் பொதுஇடங்களில் பொதுமக்களை தேவையின்றி தொந்தரவும் செய்யக்கூடாது என்பது சட்டமாக உள்ளது, இதனால் நன்கொடை பெறுவது வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது, மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மக்களைச் சந்திக்கவிருப்பவர்கள் அரசிடம் தாங்கள் மக்களிடம் சென்று விற்பனை செய்யவோ, நன்கொடை பெறவோ உரிமம் வேண்டும் என்பது சட்டமாகியுள்ளது உரிமம் பெறாமல் மக்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.