Home » உலகச் செய்திகள் » பொருளாதார சீரதிருத்தங்களுக்கு எதிர்ப்பு லட்சக்கணக்கானோர் பாதிப்பு

பொருளாதார சீரதிருத்தங்களுக்கு எதிர்ப்பு லட்சக்கணக்கானோர் பாதிப்பு

பிரான்சில் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக அன்றாட பணிகளுக்கு ரயில் பயணத்தை நம்பி இருக்கும் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டனர்.

👤 Saravana Rajendran8 April 2018 12:38 PM GMT
பொருளாதார சீரதிருத்தங்களுக்கு எதிர்ப்பு லட்சக்கணக்கானோர் பாதிப்பு
Share Post

அதிபர் இமானுவேல் மெக்ரோன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த முடிவின் காரணமாக பிரான்ஸ் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் ரயில்வே ஊழியர்களின் போராட்டம் 48 மணிநேரமாக தொடர்கிறது, தொடர்ந்து 2 நாட்கள் ரயில்கள் ஓடவில்லை, இதனால் நகரங்களுக்கு இடையே அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் அமைப்பு கூறியுள்ளதாவது, எங்களது போராட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் போராட்டத்தின் போது மக்கள் ஆதரவு தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது, இதனால் போராட்டங்கள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.