Home » உலகச் செய்திகள் » சீனாவை அடுத்து அமெரிக்கா செல்ல விருக்கு கிம் ஜோங் உன்

சீனாவை அடுத்து அமெரிக்கா செல்ல விருக்கு கிம் ஜோங் உன்

மிகவும் இருக்கமான நாடாக கருத்தப்பட்ட வடகொரியா, தற்போது மிகவும் மாற்றங்கள் நிகழ்வும் நாடாக மாறிவருகிறது,

👤 Saravana Rajendran9 April 2018 1:59 AM GMT
சீனாவை அடுத்து அமெரிக்கா செல்ல விருக்கு கிம் ஜோங் உன்
Share Post

வட கொரிய அதிபர் கின் ஜோங் உன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அதற்காக தான் அமெரிக்கா செல்ல தயார் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வடகொரிய அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களது அதிபரின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது எவ்வகையான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்பது இதுவரை தெரியவில்லை, இருப்பினும் அணுஆயுத சோதனைகள் குறித்து பேசப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
இதை அமெரிக்க நாளிதழ்களும் உறுதிப்படுத்துகின்றன.
வடகொரியா தனது அதிபரின் விருப்பத்தை அமெரிக்காவிடம் நேரடியாக தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை என்று கருத்தப்படுகிறது,
வடகொரிய அதிபர் மார்ச் மாதம் சீனாவிற்கு ரெயில் மூலம் பயணம் செய்து சீன அதிபரைச் சந்தித்தார், அவர் அதிபர் ஆண பிறகு முதல் முறையாக வடகொரியாவை விட்டு வெளிவந்து பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவில் அரசியல் ராஜதந்திரமா?
பல்வேறு பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் வடகொரியா மீது நேரடியாக பரிவு காட்டினால், உலக நாடுகளில் பல்வேறு வர்த்தக சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில் சீன அதிபர் கிம் ஜோங் உன்-அய் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது உலக நாடுகள் பொருளாதார தடைகளை நீக்கும் வாய்ப்பு ஏற்படலாம் அதன் மூலம் வடகொரிய சீன உறவை அதிக உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற ராஜதந்திர முடிவின் காரணமாக வடகொரிய அதிபர் முதல் முறையாக அமெரிக்கா செல்ல விருப்பம் தெரிவித்திருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.