Home » உலகச் செய்திகள் » ரசாயன ஆயுதக் கிடங்குகள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம்-டிரம்ப்

ரசாயன ஆயுதக் கிடங்குகள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம்-டிரம்ப்

சிரியா மீது அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் திடீர் தாக்குதல் நடத்தியது, இது குறித்து விளக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் ரசாயன ஆயுதக்கிடங்குகள் மீதுமட்டும் தான் என்று கூறியுள்ளது.

👤 Saravana Rajendran14 April 2018 2:25 PM GMT
ரசாயன ஆயுதக் கிடங்குகள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம்-டிரம்ப்
Share Post

சிரியாவின் மீது இன்று காலை அமெரிக்க ஏவுகனைதாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதல் அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தைக் குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்கூறியதாவது எங்கள் தாக்குதலில் நோக்கம் சிரியாவின் அதிபர் பசர் அல்-அசாத்- ரசாயன ஆயுதம் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்பதே அந்தத் தாக்குதலின் நோக்கம் என்றார் திரு டிரம்ப்.
அண்மையில், சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, அந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் நிகழும் இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுப்பதற்கு இதை விட வேறு நடைமுறைக்குரிய வழி இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.