Home » உலகச் செய்திகள் » இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜெர்மனி -- பிரிட்டன் இடையே கடந்த 1944-ஆம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது பெர் லின் நகரில் உள்ள...

👤 Saravana Rajendran21 April 2018 4:07 PM GMT
இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு
Share Post

ஜெர்மனி -- பிரிட்டன் இடையே கடந்த 1944-ஆம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது பெர் லின் நகரில் உள்ள பல பகுதி களின்மீது பிரிட்டன் நாட்டு விமானப்படைகள் மிகப்பெரிய வெடிகுண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தின. இதில் பல நக ரங்கள் இடிந்து, தரை மட்ட மாகி, நிர்மூலமாகிப் போயின.
பின்னர், மெல்ல,மெல்ல மீண்டும் கட்டமைக்கப்பட்ட பல நகரங்கள் தற்போது புதுப் பொலிவுடன் மிளிர்கின்றன. இந்நிலையில், பெர்லினில் உள்ள ஹெய்டேஸ்ராஸ்ஸி பகு தியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் பள்ளம் தோண்டியபோது மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை சமீபத் தில் கண்டுபிடித்தனர்.
பிரிட்டன் நாட்டு விமானப் படைகளால் வீசப்பட்டு வெடிக் காமல் போன சுமார் 500 கிலோ எடையுள்ள இந்த குண்டை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதையடுத்து, இங்குள்ள ஹாப்ட்பான்ஹாஃப் மத்திய ரயில் நிலையம், அரு கில் உள்ள பேருந்து நிலையம், ராணுவ மருத்துவமனை போன் றவை மூடப்பட்டுள்ளன.
சுமார் 800 மீட்டர் சுற்றள வில் வசிக்கும் மக்கள் அனை வரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளி யேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் எதிரொலியாக சுமார் 10 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு, வெளியேற் றப்பட்டு தற்காலிக முகாம்க ளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். அந்த பகுதியில் பொது வாகனப் போக்குவரத் துக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.