Home » உலகச் செய்திகள் » அணுஆயுதச் சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

அணுஆயுதச் சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

அணு ஆயுதச் சோதனை மூலம் அமெ ரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரியா அதிபர்...

👤 Saravana Rajendran21 April 2018 4:12 PM GMT
அணுஆயுதச் சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
Share Post

அணு ஆயுதச் சோதனை மூலம் அமெ ரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்.
முதற்கட்டமாக தென்கொ ரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டி யது. இதை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தென்கொரியா தெரி வித்தது. உடனே அவரும் கிம் ஜாங் உன்னை சந்திக்கத் தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த சந்திப்பு நிகழக்கூடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அணு ஆயுதச் சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. தற்போது அணு ஆயுதச் சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதச் சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டு உள்ளார். அணு ஆயுதச் சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமல்லாது உலக வளர்ச்சிக் கும் உதவும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.