Home » உலகச் செய்திகள் » வேதி ஆயுதங்கள் என்று சந்தேகிக்கப்படும் கழிவுகளைப் பார்வையிட்ட பன்னாட்டு ஆய்வாளர்கள்

வேதி ஆயுதங்கள் என்று சந்தேகிக்கப்படும் கழிவுகளைப் பார்வையிட்ட பன்னாட்டு ஆய்வாளர்கள்

சிரியாவின் கைப்பற்றப்பட்ட வேதி ஆயுதங்களை அய்க்கிய நாடுகள் ஆவையினால் அமைக்கப்பட்ட நிபுனர்கள் பார்வையிட்டனர். இவை எவ்வகை வேதி ஆயுதங்கள் என்பதை கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

👤 Saravana Rajendran22 April 2018 12:46 AM GMT
வேதி ஆயுதங்கள் என்று சந்தேகிக்கப்படும் கழிவுகளைப் பார்வையிட்ட பன்னாட்டு ஆய்வாளர்கள்
Share Post

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்றும் வருகிறது, அந்நாட்டு அதிபர் தனது நாட்டு மக்களின் மீது வேதி ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தனை அடுத்து சமீபத்தில் அமெரிக்கா சிரிய வேதி ஆயுதப் பரிசோதனை மையத்தில் ஏவுகனை வீசியது, இந்நிலையில் சிரியாவின் டோமா நகரில் வேதி ஆயுதம் வீசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு அய்க்கிய நாடுகள் அவையால் அமைக்கப்பட்ட ஆய்வாளர் குழு நேரடியாக சென்று பரிசோதனை செய்தது. அப்போது அங்கு கிடைத்த சில வெடிக்கப்பட்ட குண்டுகள் என்று கூறப்பட்ட குண்டுகளின் சிதறல்களை சேகரித்தனர்.
இங்கு சில வாரங்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்டோர் நச்சுவாயு கொண்ட குண்டுவெடிப்பால் இறந்தனர் என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் இங்கு சோதனை மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு சிதறல்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சில பொருட்களையும் சேகரித்து நெதர்லாந்திற்கு கொண்டு சென்று அதை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர். இதன மூலம் எவ்வகை வேதி ஆயுதங்களை சிரிய அரசு பயன்படுத்தியது என்று தெரியவரும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.