Home » உலகச் செய்திகள் » வணிகத்திற்காக கருப்பை வெள்ளையாக்குவதா???

வணிகத்திற்காக கருப்பை வெள்ளையாக்குவதா???

மிகச்சிறந்த கம்யூனிசவாதியும் அரசியலை ஓவியாமாக மக்களிடன் கொண்டுசேர்ந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த...

👤 Saravana Rajendran22 April 2018 12:48 AM GMT
Share Post

மிகச்சிறந்த கம்யூனிசவாதியும் அரசியலை ஓவியாமாக மக்களிடன் கொண்டுசேர்ந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த பிரீடா காலோ, மெக்சிகோவில் சிவப்பிந்திய குடும்பத்தில் இருந்துவந்த இவர் தங்களை அடக்கி ஆண்ட அய்ரோப்பியர்களை எதிர்த்து சிறுவயது முதலே போராட்டத்தில் இறங்கியவர், தன்னுடைய பல்கலைக்கழக படிப்பின் போது விபத்து ஒன்றில் சிக்கியதால் இவரது கால்கள் செயலிழந்து போயின. இதனால் இவர் தனது அரசியல் போராட்டத்தை ஓவியங்களின் மூலம் மக்களிடம் கொண்டுசென்றார். இவரது ஓவியங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிலும் கம்யூனிச நாடுகளிலும் புகழ்பெற்ற அரசியல் ஓவியமாக கருத்தப்படுகின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இவருக்கு கிடைத்த புகழை வைத்து இவரைப் போன்றோ ஒரு பர்பி என்ப்படும் தேவதை பொம்மையை பன்னாட்டு மகளீர் தினத்தை ஒட்டி மாட்டல் என்ற நிறுவனம் வெளியிட்டது. மக்களிடையே அதீத வரவேற்பை பெற்ற இந்த பொம்மைகள் தற்போது விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரீடா கலோவின் உறவினர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அதில் பிரீடா காலோ வெளுத்த தோல் கொண்டவர் அல்ல, அவரது நிறம் கருப்பு, அவரது உருவம் போன்ற பொம்மையை வெள்ளை நிறத்தில் உருவாக்கி மெட்டல் என்ற நிறுவனம் விற்பனை செய்துவருகிறது, விற்பனைக்காக புகழ்பெற்ற ஒருவரின் நிறத்தையே மாற்றுவது எனது ஏற்றுக்கொள்ள முடியாது. பிரீடா காலோ தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர், அவரை மக்கள் அவரது உண்மையான தோற்றத்துடனே பார்க்கவேண்டுமே தவிர அவரை வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் போல மாற்றி மக்களிடையே கொண்டுசெல்வது அவரது அரசியல் வாழ்க்கையை கொச்சைப்படுத்துவது போலாகிவிடும். அவர் மக்களிடையே உண்மையான தோற்றத்துடனேயே கொண்டுசெல்லவேண்டும். ஆகவே மெட்டல் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் அவரது உருவ பொம்மைகளை சந்தையில் கொண்டுசெல்லாமல் இருக்க தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருதார்.
இதனை அடுத்து மெக்சிகோ உச்சநீதிமன்றம் மெட்டல் நிறுவனம் விற்பனைக்கு வைத்திருக்கும் பிரீடா காலோ பொம்மைகளை விற்பனை செய்யகூடாது என்றும் அந்நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இதே மாதரிகளில் வேறு பொம்மைகள் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது,
பிரிடா காலோ உருவத்திற்கான உரிமம், அவருடைய குடும்பத்தினருக்கே சொந்தம் என்று மெக்சிகோ நிதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.