Home » உலகச் செய்திகள் » அணு ஆயுத சோதனை நிறுத்தம் உலக நாடுகள் வரவேற்பு

அணு ஆயுத சோதனை நிறுத்தம் உலக நாடுகள் வரவேற்பு

அய்க்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவு கணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடு...

👤 Saravana Rajendran22 April 2018 4:22 PM GMT
Share Post

அய்க்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவு கணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடு களை அதிர வைத்த வடகொ ரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார். சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடை பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென் கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார். பேச்சு வார்த்தைக்கு வந்த தென் கொரிய பிரதிநிதிகளிடம் இப் போதைக்கு ஏவுகணை சோத னைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது. கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் பச்சைக் கொடி கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெ ரிக்கா - வடகொரியா இடையே யான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை கள் நடைபெறாது என அந் நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மய்யங்களை மூட அதிபர் உத் தவிட்டுள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அறி விப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளார்.
இதேபோல், அய்ரோப்பிய யூனியன், வடகொரியாவின் அண்டை நாடான சீனா மற் றும் ரஷ்யா உள்ளிட்ட நாடு கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.