Home » உலகச் செய்திகள் » மால் ஒன்றிற்குள் புகுந்த காளை

மால் ஒன்றிற்குள் புகுந்த காளை

தென் அமெரிக்க நாடான பெருவின் குஸ்கோ நகரில் ஒரு காளை மால் ஒன்றிக்குள் புகுந்து விட்டது. அதையடுத்து அங்கு நடந்த கலவரமான சூழலில் 8 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.

👤 Saravana Rajendran26 April 2018 2:54 PM GMT
மால் ஒன்றிற்குள் புகுந்த காளை
Share Post

மால் ஒன்றினுள் புகுந்த காளை அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுமாறியது. தவித்தது. இடையில் ஒருவர் அந்தக் காளையைக் கட்டுப்படுத்த முனைந்தார். ஆனால் அது கட்டுப்படவில்லை.
ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல் காளை களைத்துப் போனது . சிறிது நேரத்துக்குப் பிறகு, நகர அதிகாரிகள் அந்தக் காளையை பத்திரமாக மீட்டு அதன் இடத்துக்குக் கொண்டு சேர்த்தனர்