Home » உலகச் செய்திகள் » முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நலம் தேறிவருகிறது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நலம் தேறிவருகிறது

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார். நுரையிரல் மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் தொற்றுநோய் காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

👤 Saravana Rajendran26 April 2018 2:57 PM GMT
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நலம் தேறிவருகிறது
Share Post

அவரது மனைவி பார்பரா புஷ் மறைவுக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 93 வயது புஷ், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 41வது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. பார்க்கின்சன்ஸ் நோயால் அவதியுறும் புஷ், கடந்த ஆண்டுகளில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.