Home » உலகச் செய்திகள் » கொரிய தீபகற்பத்தின் இரண்டு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தின் இரண்டு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

வடகொரிய அதிபர் கின் ஜொங் உன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இருவரும் வெள்ளிக்கிழமை(27.4.2018) நேரில் சந்தித்து பேசவிருக்கிறனர்.

👤 Saravana Rajendran26 April 2018 3:19 PM GMT
Share Post

இரண்டு நாட்டு அதிபர் மாளிகை செய்திக்குறிப்பின் படி வெள்ளிக்கிழமை காலை இரு கொரியாக்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்.
வடகொரிய தலைவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்புச் சடங்கிற்கு அவரை அழைத்துச் செல்ல, தென்கொரிய ராணுவத்தின் கௌரவப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் இருவருக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமான கலந்துரையாடல் தொடங்கும். சந்திப்பைத் தொடர்ந்து, இரு தரப்பும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைப் பற்றி அறிவிக்கவிருப்பதாகத் தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.