Home » உலகச் செய்திகள் » கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் அழிப்பது தொடர்பாக இரண்டு நாட்டு தலைவர்களும் உறுதிமொழி

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் அழிப்பது தொடர்பாக இரண்டு நாட்டு தலைவர்களும் உறுதிமொழி

உலகமே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கொரிய நாட்டுத்தலைவர்களின் சந்திப்பின் போது அணு ஆயுதத்தை அழிப்பத்து தொடர்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்ற செய்தி கிழக்கிலிருந்து புறப்பட்ட அமைதி ஒளியாக உலகத்திற்கு ஒளியுறும் என்று தெரிகிறது

👤 Saravana Rajendran27 April 2018 2:52 PM GMT
Share Post

வடகொரிய அதிபர் கின் உன் ஜோங் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜோ இன் இருவருடைய சந்திப்பு நிகழ்வு காலை நடைபெற்றது, இரண்டு தலைவர்களின் சந்திப்பினால் 65 வருடங்களுக்குப் பிறகு இரு கொரியாக்களும் கொரியப் போருக்கு நிரந்தர முடிவிற்கு வருகிறது.
இதற்குமுன் அமைதி உடன்பாட்டுக்கு பதில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையே அவை செய்துகொண்டன.
இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் கொரியப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பதும் நிரந்தரமான, வலுவான அமைதியை கொரிய தீபகற்பத்தில் ஏற்படுத்துவதும் ஆகும். அதே வேளையில் கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத அழிப்பை செயலாற்ற இரு கொரியாக்களின் தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதத்தில் இரு கொரியாக்களும் போரில் பிரிந்து சென்ற குடும்பங்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.