Home » உலகச் செய்திகள் » பெல்ஜியத்தில் வைரங்களுக்கான அருங்காட்சியகம்

பெல்ஜியத்தில் வைரங்களுக்கான அருங்காட்சியகம்

வைரத்தின் நாடு எனப்போற்றபடும் பெல்ஜியத்தில் வைர வர்த்தகத் துறை வரலாற்றின் 500 ஆண்டு கால வரலாற்றைச்...

👤 Saravana Rajendran6 May 2018 3:49 PM GMT
பெல்ஜியத்தில்   வைரங்களுக்கான அருங்காட்சியகம்
Share Post

வைரத்தின் நாடு எனப்போற்றபடும் பெல்ஜியத்தில் வைர வர்த்தகத் துறை வரலாற்றின் 500 ஆண்டு கால வரலாற்றைச் சிறப்பிக்கும் வகையில் அருஞ்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது
பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் உள்ளது டீவா அருங்காட்சியகம்.
பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1860 ஆம் ஆண்டு பிரான்ஸில் செய்யப்பட்ட பாம்பு வடிவ வளையல். 1,617 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க டென்னிஸ் மட்டை. வைரத்தை இழைத்துச் செய்யப்பட்ட காலணி. எந்தப் பெண்ணுக்கும் இளவரசி போன்ற தோற்றம் தரும் கீரிடம். இதே போன்று 16 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பல வைரப் பொருட்கள் மற்றும் நகைகள்
இந்த அருங்காட்சியகத்தில் விலை உயர்ந்த வைரக் கலைப் பொருட்கள் தயாரிக்கப்படும் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
போலி வைரக் கற்கள், வெள்ளியினால் ஆன பொருட்களைப் அடையாளங்காண்பது குறித்தும் அறிய வாய்ப்பு உண்டு. உலகில் பயன்பாட்டில் உள்ள தீட்டப்படாத வைரத்தில் 80 விழுக்காடும், தீட்டப்பட்ட வைரத்தில் 50 விழுக்காடும் இந்த நகரத்திலிருந்தே சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.