Home » உலகச் செய்திகள் » குடும்பத்துடன் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

குடும்பத்துடன் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

இந்தோனேசியாவின் சுரபாயா காவல்துறைத் தலைமையகத்தில், 8 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

👤 Saravana Rajendran14 May 2018 2:53 PM GMT
குடும்பத்துடன் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்
Share Post

இந்தோனேசியாவின் சுரபாயா காவல்துறைத் தலைமையகத்தில், 8 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அய்ந்த்பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டுக் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்தக் குடும்பத்தினர், காவல்துறைக் கட்டடத்துக்கு வெளியே உள்ள சோதனைச்சாவடியில் குண்டுகளை வெடிக்கச் செய்து மாண்டனர். தாக்குதலின்போது உயிர்தப்பிய அந்த 8 வயதுக் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது.
நேற்று சுரபாயாவின் 3 தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 13 பேர் மாண்டனர். இந்நிலையில், புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை இந்தோனேசியாவில் நிறைவேற்ற அதிபர் ஜோக்கோ விடோடோ உறுதியளித்துள்ளார். இந்தோனேசியாவில் செயல்படும் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் செயல்பாட்டை முறியடிக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது.
காவல்துறை, இராணுவத்தின் உதவியுடன் நாடு முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று இந்தோனேசியாவின் தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.