Home » உலகச் செய்திகள் » பீஹாரில் ரயில் தடம் புரண்டது - 6 பேர் பலி

பீஹாரில் ரயில் தடம் புரண்டது - 6 பேர் பலி

பீஹாரில், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின், 11 பெட்டிகள் தடம் புரண்டது.

👤 Sivasankaran4 Feb 2019 5:57 PM GMT
பீஹாரில் ரயில் தடம் புரண்டது - 6 பேர் பலி
Share Post

பீஹாரில், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின், 11 பெட்டிகள் தடம் புரண்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், இந்த விபத்துக்கு காரணம் என, சந்தேகிக்கப்படுகிறது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜோக்பானியில் இருந்து, டில்லியின் ஆனந்த் விஹாருக்கு, சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், பீஹாரின் வைஷாலி மாவட்டத்தின், சகதாய் பசர்க் பகுதியில் தடம் புரண்டது.

ரயிலின் ஒரு பொது பெட்டி, ஒரு, 'ஏசி' பெட்டி, தூங்கும் வசதியுள்ள ஒரு பெட்டி மற்றும் ஆறு முன்பதிவில்லாத பெட்டி என, 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர்; 29 பேர் காயமடைந்துள்ளனர்.