Home » உலகச் செய்திகள் » பிரான்ஸில் 11வது வாரமாக தொடரும் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸில் 11வது வாரமாக தொடரும் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் 11வது வாரமாக இன்று (சனிக்கிழமை) தொடர்வதாக செய்திகள் வந்துள்ளன.

👤 Sivasankaran26 Jan 2019 3:59 PM GMT
பிரான்ஸில் 11வது வாரமாக தொடரும் ஆர்ப்பாட்டம்
Share Post

பிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் 11வது வாரமாக இன்று (சனிக்கிழமை) தொடர்வதாக செய்திகள் வந்துள்ளன.

தலைநகர் பாரிஸில் 'யெலோ வெஸ்ட்' என்ற அமைப்பினர் இன்று 11வது வாரமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். பாரிஸ் வீதிகளில் குவிந்துள்ள ஆயிரக்காணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தலைநகர் பாரிஸில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் மிகப்பெரிய போராட்டமாக எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான போராட்டம் அமைந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தால் வெடித்த வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.