Home » உலகச் செய்திகள் » மார்ச் 12க்குள் அடுத்தகட்ட வாக்கெடுப்பு - பிரதமர் மே உறுதி

மார்ச் 12க்குள் அடுத்தகட்ட வாக்கெடுப்பு - பிரதமர் மே உறுதி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

👤 Sivasankaran25 Feb 2019 4:25 PM GMT
மார்ச் 12க்குள் அடுத்தகட்ட வாக்கெடுப்பு - பிரதமர் மே உறுதி
Share Post

பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு இவ்வாரம் பாராளுமன்றில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 12இற்குள் அடுத்த வாக்கெடுப்பு நடத்தப்படுமென பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் உரிய உடன்பாடுகளுடன் மார்ச் 29இல் பிரெக்ஸிற் இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எகிப்தில் நடைபெறும் அரேபிய – ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் மே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றியத்திலிருந்து உடன்பாடுகளுடன் வெளியேறுவதற்கான சாதகமாக நிலைகளை இன்னும் பிரித்தானியா கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் 432இற்கு 202 வாக்குகள் என்ற ரீதியில் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முனைப்பில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். அதுகுறித்து பிரசல்ஸில் மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.