Home » உலகச் செய்திகள் » மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை -120 பேர் காயம்

மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை -120 பேர் காயம்

தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👤 Sivasankaran18 March 2019 4:43 PM GMT
மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை -120 பேர் காயம்
Share Post

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியதால் அங்கு மாபெரும் போராட்டம் நடக்க தொடங்கியது. கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இது 'மஞ்சள் அங்கி போராட்டம்' என அழைக்கப்பட்டது.

வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு அதிபர் மெக்ரான் தலைமையிலான அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. இருப்பினும் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து வார இறுதி நாட்களில் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். அவர்களை விரட்டி அடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.

இதனால் பாரீஸ் நகரமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த வன்முறையில் பலர் காயம் அடைந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.