Home » உலகச் செய்திகள் » டொனால்ட் டிரம்ப் மோசடி வெற்றி 13 ரஷ்யர்கள் கைது

டொனால்ட் டிரம்ப் மோசடி வெற்றி 13 ரஷ்யர்கள் கைது

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் நிலையில் இச்சதி தொடர்பாக 13 ரஷ்யர்கள் கைதுசெய்யப்படுள்ளார்கள். இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் மோசடி மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்று பெற்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

👤 Saravana Rajendran17 Feb 2018 4:21 PM GMT
டொனால்ட் டிரம்ப் மோசடி  வெற்றி 13 ரஷ்யர்கள் கைது
Share Post

உலகமே எதிர்பார்த்த அதிபர் தேர்தலில் தடாலடி மாற்றமாக அரசியல் தொடர்பே இல்லாத டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு வெற்றிபெற்றார். இவரது வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் தலையீடு பற்றி சிறப்பு வழக்குரைஞர் ராபர்ட் முல்லர் என்பவரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள இணைய ஆய்வு நிறுவனம், 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் திட்டத்தோடு செயல்படுவதாக, 37 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இக்குற்றச்சாட்டில் ரஷ்ய அதிபர் புதினின் சமையற்காரர் என்று அறியப்படும் இவ்ஜெனி பிரிகோசின் என்பவர் பெயரும் உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
ஆனால் இது குறித்து பதிலளித்த டொனால்ட் டிரம்ப் தன்னுடைய அதிபர் தேர்தல் பரப்புரையில் எவ்வித தவறையும் செய்யவில்லை என்று பின்னர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ளார்.