Home » உலகச் செய்திகள் » மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அமெரிக்கா பலியானது. பள்ளிமாணவர்கள் உட்பட 17 பேர் கொலை

மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அமெரிக்கா பலியானது. பள்ளிமாணவர்கள் உட்பட 17 பேர் கொலை

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் முன்னாள் பள்ளிமாணவன் தான் படித்த பள்ளியில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் பள்ளிமாணவர்களுடன் சேர்ந்த 17 பேர் மரணமடைந்தனர்.

👤 Saravana Rajendran15 Feb 2018 9:35 AM GMT
மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அமெரிக்கா பலியானது. பள்ளிமாணவர்கள் உட்பட 17 பேர் கொலை
Share Post

புளோரிடாவில் உள்ள பார்க்லாண்ட் ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நன்பகல் அப்பள்ளியில் படித்த மாணவர் நிகோலஸ் க்ரூஸ் என்பவர் தனது வீட்டில் இருந்த தானியங்கி வகை துப்பாக்கியால் வகுப்பறைகளில் கன்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் வகுப்பறையில் சிலரும் வளாகத்தில் இருந்த சிலரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டும் மரணமடைந்தவர்களில் பள்ளிமாணவர்களும் அடங்குவர். இது தொடர்பாக புளோரிடா காவல்துறையினர் கூறியதாவது ,"புளோரிடா பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு நாங்கள் சென்று விசாரித்த போது துப்பாக்கியால் சுட்டவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் என தெரியவந்துள்ளது. 19 வயது நிரம்பிய அந்த இளைஞரின் சமூகவலைதளப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
எங்கள் விசாரணைக்கு எப்பிஐ புலணாய்வு நிறுவனமும் உதவி வருகிறது. மோசமான நடத்தை காரணமாக நிக்கோலஸ் க்ரூஸ் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நிக்கோலஸிடம் இருந்து அதிக அளவில் துப்பாக்கிமற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நிகழ்விடத்தில் இருந்த நிக்கோலஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலியான 17 பேரில் 12 பேர் பள்ளி வளாகத்துக்குள்ளும் ஒருவர் வளாகத்துக்கு வெளியிலும் மற்றும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் இவர்களில் எத்தனை பேர் பள்ளி மாணவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதிபர் ட்ரம்ப் கண்டனம்
புளோரிடா துப்பாக்கிச் சூட்டுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கப் பள்ளியில் பயிலும் எந்த ஒரு குழந்தையும் பயிற்றுவிக்கும் எந்த ஒரு ஆசிரியரும் பாதுகாப்பற்று உணரக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.