Home » உலகச் செய்திகள் » சீனாவில் படகு கவிழ்ந்த 17 பேர் உயிரிழப்பு

சீனாவில் படகு கவிழ்ந்த 17 பேர் உயிரிழப்பு

சீனாவின் குய்லின் பகுதியில் தாவோஹு வாஜியாங் என்னும் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

👤 Saravana Rajendran22 April 2018 3:43 PM GMT
சீனாவில் படகு கவிழ்ந்த 17 பேர் உயிரிழப்பு
Share Post

இதனிடையே, இந்த ஆற்றில் நேற்று படகு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த போட்டி குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக் கப்பட்டவில்லை.
இந்நிலையில், படகு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி ஓட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீ ரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ் கின. இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனை வரும் ஆற்றில் மூழ்கினர். உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதை யடுத்து இந்த படகு போட்டிக்கு ஏற்பாடு செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.