Home » உலகச் செய்திகள் » எத்தியோப்பியாவில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பரிதாபமாக பலி

எத்தியோப்பியாவில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பரிதாபமாக பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

👤 Sivasankaran17 Jan 2019 6:35 PM GMT
எத்தியோப்பியாவில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பரிதாபமாக பலி
Share Post

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.