Home » உலகச் செய்திகள் » விமான விபத்தில் 18 கனடியர்கள் உயிரிழப்பு

விமான விபத்தில் 18 கனடியர்கள் உயிரிழப்பு

18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

👤 Sivasankaran11 March 2019 4:27 PM GMT
விமான விபத்தில் 18 கனடியர்கள் உயிரிழப்பு
Share Post

எத்தியோப்பிய, பயணிகள் விமானம் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.