Home » உலகச் செய்திகள் » நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

நைஜீரியாவில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

👤 Saravana Rajendran17 Feb 2018 4:19 PM GMT
நைஜீரியாவில்  குண்டு வெடிப்பு: 19 பேர் பலி
Share Post

நைஜீரியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கோண்டுகா என்னும் இடத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமை காலை இரட்டை தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைடுக்ரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கோலோ என்னும் இடத்தில் மூன்றாவது குண்டு வெடித்தது.
இதில் 18 பொதுமக்கள் மற்றும் ஒரு ராணுவ வீரர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டு அரசு தகவல் அளித்துள்ளது.கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நைஜீரியாவைக் குறிவைத்துத் தாக்கி வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது