Home » உலகச் செய்திகள் » தெற்கு வன்கூவரில் 2 வது படுகொலை

தெற்கு வன்கூவரில் 2 வது படுகொலை

கனடா, தெற்கு வன்கூவர் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய ஆல்வரோ ஜூலியோ ரோச்-கார்சியா என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran30 Jan 2019 5:17 PM GMT
தெற்கு வன்கூவரில் 2 வது படுகொலை
Share Post

கனடா, தெற்கு வன்கூவர் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய ஆல்வரோ ஜூலியோ ரோச்-கார்சியா என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மீது முதலாவது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஃப்ரேசர் மற்றும் 51 வது அவென்யூ கிழக்கு பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 68 வயதுடைய நபர் படுகாயமடைந்தார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக அறிந்து அங்கு சென்ற பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கொலையானது நகரில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இரண்டாவது படுகொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.