Home » உலகச் செய்திகள் » வடக்கு ஸ்பெயினில் 2வது நாளாக தொடரும் காட்டுத்தீ

வடக்கு ஸ்பெயினில் 2வது நாளாக தொடரும் காட்டுத்தீ

வடக்கு ஸ்பெயினின் அஸ்தூரியாஸ் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் காட்டுத்தீ பரவியுள்ளது. நேற்று ...

👤 Sivasankaran5 March 2019 5:16 PM GMT
வடக்கு ஸ்பெயினில் 2வது நாளாக தொடரும் காட்டுத்தீ
Share Post

வடக்கு ஸ்பெயினின் அஸ்தூரியாஸ் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் காட்டுத்தீ பரவியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை 44 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அசாதாரணமாக நீடிக்கும் உயர் வெப்பநிலை மற்றும் குறைவான ஈரப்பதம் ஆகியனவே காட்டுத்தீ ஏற்படக் காரணம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏற்கனவே நான்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பணியில் மேலும் இரு தீயணைப்பு விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் பணியில் பயன்படுத்தப்பட்டு தீயணைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.