Home » உலகச் செய்திகள் » சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு பிரம்படியுடன் 28 ஆண்டுகால சிறைவிதிப்பு

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு பிரம்படியுடன் 28 ஆண்டுகால சிறைவிதிப்பு

சிங்கபூரைச் சேர்ந்த தொடர் குற்றவாளி 13 வயது சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிற்காக 28 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துடன் 21 பிரம்படியும் சிங்கபூர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

👤 Saravana Rajendran26 April 2018 5:26 PM GMT
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு பிரம்படியுடன் 28 ஆண்டுகால சிறைவிதிப்பு
Share Post

சிங்கபூரைச் சேர்ந்த தொடர் குற்றங்களைச் செய்துவரும் கொள்ளைக்கும்பல் ஒன்றின் தலைவராக இருப்பவர் கோ ரங் குவா இவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அதை படமாக எடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குவா கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் இவரது குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டது, இதற்கு தீர்ப்பை அறிவித்த நீதிபதி கொள்ளைக்கூட்டத்தலைவனான கோ ரோங் குவானுக்கு 28 ஆண்டு கடுஞ்சிறைவாசம் அறிவித்தார். மேலும் 21 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது, இதனை அடுத்து அவருக்கு பிரம்படி கொடுத்து சிறைக்கு அனுப்பும் பணியில் சிங்கபூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இதைவிட கடுமையான தண்டனைகள் தேவை கூறினார்கள்