Home » உலகச் செய்திகள் » ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலி

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலி

ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது.

👤 Sivasankaran15 Jan 2019 4:20 PM GMT
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலி
Share Post

ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.

நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக சிக்கி இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது இன்னமும் தெரியவில்லை.