Home » உலகச் செய்திகள் » சிறைச்சாலைகளில் கைதிகள் அவதி – மனநல பாதிப்பால் 4 பேர் மரணம்

சிறைச்சாலைகளில் கைதிகள் அவதி – மனநல பாதிப்பால் 4 பேர் மரணம்

நியூபவுண்லாந்து மற்றும் லாப்ரடோர் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதய நடைமுறைகள் சீராக இல்லாதமை காரணத்தினால், அங்குள்ள கைதிகள் பலத்த மன நல பாதிப்புகளை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

👤 Sivasankaran7 Feb 2019 5:40 PM GMT
சிறைச்சாலைகளில் கைதிகள் அவதி – மனநல பாதிப்பால் 4 பேர் மரணம்
Share Post

நியூபவுண்லாந்து மற்றும் லாப்ரடோர் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதய நடைமுறைகள் சீராக இல்லாதமை காரணத்தினால், அங்குள்ள கைதிகள் பலத்த மன நல பாதிப்புகளை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு கைதிகள் மரணமானதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன ஆய்வுகளின் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், நியூ பிரவுன்ஸ்விக் மாநிலத்தின் மிகப்பெரிய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலையின் அவல நிலை வெளியாகியுள்ளது.

அங்கு காணப்படும் இடப்பற்றாக்குறை, அதன் காரணமாக அளவுக்கு அதிகமானோர் அங்கு அடைக்கப்பட்டுள்ளமை, போதிய சுகாதார சேவைகள் வழங்கப்படாமை, பணியாளர்களுக்கான பயிற்சிகள் போதிய அளவில் இல்லை.

இதன் காரணமாக அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மனநல பாதிப்புகளை எதிர்நோக்குவதாக, இளைப்பாறிய பொலிஸ் மார்லின் ஜேசோ தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அந்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு கைதிகள் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் நாவல்வருமே இவ்வாறான மனநல பாதிப்பினை எதிர்நோக்கி வந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களின் மரணத்திற்கான பதில் நடவடிக்கைகள் குறித்து எந்தவித தீர்வுகளும் கூறப்படவில்லை என்ற போதிலும், அங்குள்ள நடைமுறைகளில் காணப்படும் பாரிய குறைபாடுகள், கைதிகளின் தேவைகளை போதிய அளவில் ஈடுசெய்யும் வகையில் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.