Home » உலகச் செய்திகள் » சிறுமி பாலியல்வன்கொடுமைக் கொலை இளைஞருக்கு 4 மரணதண்டனை

சிறுமி பாலியல்வன்கொடுமைக் கொலை இளைஞருக்கு 4 மரணதண்டனை

பாகிஸ்தானில் 6 வயது சிறுமிஜைனப்பை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த 24 வயது இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 4 மரண தண்டனை விதித்தது.

👤 Saravana Rajendran17 Feb 2018 3:22 PM GMT
சிறுமி பாலியல்வன்கொடுமைக் கொலை இளைஞருக்கு 4 மரணதண்டனை
Share Post

பாகிஸ்தானை உலுக்கிய ஜைனப் மரணம்

பாகிஸ்தானின் லாகூர் புறநகராக கசூர் நகரில் ஜனவரி 9 அன்று ஜைனப் அன்சாரி எனும் சிறுமியின் உடல் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது அதே பகுதியைச்சேர்ந்த அலி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இம்ரான் அலி மீது ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டது ஆகிய நான்கு குற்றங்களுக்காக இம்ரான் அலிக்கு தலா ஒரு மரண தண்டனையும், முறையற்ற பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக ஒரு ஆயுள் தணடனையும் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஜைனப் அன்சாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானில் பெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜைனப்பின் தந்தையும் நீதிமன்றத்தில் இருந்தார்.ஜைனப் மட்டுமல்லாது, இதற்கு முன்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த நகரில் பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குற்றச்சம்பவங்களிலும் இம்ரான் அலிக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஜைனப்பின் தந்தை கூறியதாவது, எனது மகள் காணாமல் போன 5 நாட்களாக தாங்கள் அளித்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஜைனப் கடத்தப்படும் காட்சிகள் பதிவான கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஜைனப்பின் உறவினர்களே சேகரித்து காவல் துறைக்கு வழங்கினர்.