Home » உலகச் செய்திகள் » காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி - மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி - மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்

ந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

👤 Sivasankaran15 Feb 2019 1:06 PM GMT
காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி - மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்
Share Post

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.

ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.

இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பஸ்சில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

தற்கொலை தாக்குதல் நடத்தியது அதில் அகமது என்பதும் புல்வாமா மாவட்டம் காக்கபோரா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. இவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

இந்த தாக்குதலையடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.