Home » உலகச் செய்திகள் » நியூ பிரவுன்ஸ்விக்கில் 5,000க்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் தடை

நியூ பிரவுன்ஸ்விக்கில் 5,000க்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் தடை

நியூ பிரவுன்ஸ்விக்கில் கடந்த சில தினங்களாக பெய்த கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள 5,000க்கும் அதிகமானோருக்கு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran26 Jan 2019 4:16 PM GMT
நியூ பிரவுன்ஸ்விக்கில் 5,000க்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் தடை
Share Post

கனடா, நியூ பிரவுன்ஸ்விக்கில் கடந்த சில தினங்களாக பெய்த கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள 5,000க்கும் அதிகமானோருக்கு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதம் குறித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 அளவிலான நிலவரப்படி, நியூ பிரவுன்ஸ்விக் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளில் தமது பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் நியூ பிரவுன்ஸ்விக் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மாநிலத்தின் தென்பகுதியின் பெரும்பாலான பாகங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண எச்சரிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.