Home » உலகச் செய்திகள் » ஆப்கானிஸ்தான் அய்.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் 57 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் அய்.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் 57 ஆக உயர்வு

தலிபான் பயங்கரவாதி களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப் கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் திரும்பப் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014ஆ-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

👤 Saravana Rajendran23 April 2018 3:01 PM GMT
ஆப்கானிஸ்தான் அய்.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் 57 ஆக உயர்வு
Share Post

இந்த தேர்தலில் பல்வேறு முறை கேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந் தன. நடப்பு நாடாளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத் தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப் பட்டு வந்தது. இதற்கிடையில், ஆப் கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டில் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதனால், அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர் தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில், கடந்த 1.-4.-2018 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த ஆப்கானிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் குலா ஜான் அப் துல் பாடி சயத், அக்டோபர் 20-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடை பெறும் என அதிகாரப்பூர்வமாக அறி வித்தார்.
இதையடுத்து, புதிய வாக்களர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளில் அந்நாட்டு தேர் தல் ஆணையம் மும்முரமாக ஈடு பட்டு வருகிறது. பல்வேறு இடங் களில் வாக்காளர் பதிவு மய்யங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மய்யத்தில் நேற்று பிற்பகல் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 56 பேர் காயம டைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ப தாக அய்.எஸ். பயங்கரவாத இயக்கத் தின் இணையதளம் குறிப்பிட்டுள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் பெரும் பாலோனோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 பெண் களும், 8 குழந்தைகளும் அடங்குவர். மேலும் இந்த தாக்குதலில் 119 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல, பக் லான் என்ற பகுதியில் உள்ள வாக் காளர் பதிவு மையத்தில் நேற்று குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்