Home » உலகச் செய்திகள் » இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 6 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 6 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும்.

👤 Sivasankaran23 Jan 2019 5:23 PM GMT
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 6 பேர் உயிரிழப்பு
Share Post

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடும் வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.