Home » உலகச் செய்திகள் » கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

👤 Sivasankaran21 May 2020 2:53 PM GMT
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
Share Post

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,031ஆக உள்ளது.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 119பேர் உயிரிழந்ததோடு, 1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142ஆக உயர்ந்துள்ளது. 33,335பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,776பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.