Home » உலகச் செய்திகள் » எத்தியோப்பியாவிலிருந்து நைரோபி சென்ற போயிங் 737 விமானம் விபத்து

எத்தியோப்பியாவிலிருந்து நைரோபி சென்ற போயிங் 737 விமானம் விபத்து

எத்தியோப்பாவிலிருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி '737' ரக போயிங் விமானம் 149 பயணிகளுடன் புறப்பட்டுச் ...

👤 Sivasankaran10 March 2019 1:24 PM GMT
எத்தியோப்பியாவிலிருந்து நைரோபி சென்ற போயிங் 737 விமானம் விபத்து
Share Post

எத்தியோப்பாவிலிருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி '737' ரக போயிங் விமானம் 149 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

வானில் உயர எழும்பிய 6 நிமிடத்திற்கு பின்னர் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடனான தகவல் தொடர்பை இழந்தது.

பின்னர் நடந்த தேடுதலில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாக தெரியவில்லை. 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.