Home » உலகச் செய்திகள் » விமான விபத்து 71 பேர் பலி

விமான விபத்து 71 பேர் பலி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட ரஷ்யா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமான சிப்பந்திகள் உட்பட 71 பேர் பலியானார்கள்

👤 Saravana Rajendran11 Feb 2018 3:58 PM GMT
விமான விபத்து 71 பேர் பலி
Share Post

ரஷ்யாவை சேர்ந்த ''சரடோவ் ஏர்லைன்ஸ்'' நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்டோனோவ் ஏஎன்-148 விமானம் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இந்த விமானம் சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நொடியிலேயே ரேடாரில் இருந்து காணாமல் போய் உள்ளது.
பின் அந்த விமானம் அருகில் இருக்கும் 'ஆர்குனோவா' கிராமத்தில் விழுந்து நொறுங்கியது
இந்த விமானம் நொறுங்கி விழுந்ததை மக்கள் நேரில் பார்த்து இருக்கிறார்கள். இந்த விமானத்தில் மொத்தம் 71 பேர் பயணம் செய்தனர். இதில் 65 பேர் பயணிகள். 6 பேர் விமான பணியாளர்கள். இந்த விமானவிபத்தில் அனைவருமே பலியானார்கள். தற்போது அங்கு மீட்புக்குழுவினர் சென்றுள்னனர். மீட்புப்பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள் வாணில் இருந்து தீபாற்றிக்கொண்டு நெருப்பு பந்துபோல் விழுந்தது, விழுந்த உடன் விமானம் வெடித்துச் சிதறியது, வயல்வெளிகளில் இறந்தவர்களின் உடல் சிதறிக்கிடக்கிறது என்று கூறினார்கள்.
2015-ஆம் ஆண்டு மலேசிய விமான விபத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடக்கும் மிகபெரிய விமான விபத்து ஆகும்.