Home » உலகச் செய்திகள் » அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது

அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ அல்லது நாடு கடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

👤 Sivasankaran31 Jan 2019 4:18 PM GMT
அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது
Share Post

அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பர்மிங்டன் ((Farmington)) என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600-க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், பணி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு போலியான பல்கலைக்கழகத்தில் பயில்வதாகக் கூறப்படும் 600 பேர் சிறை செல்லலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.