Home » உலகச் செய்திகள் » 16 வயது சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்த நபர்

16 வயது சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்த நபர்

பாகிஸ்தானின் தர்பார்க்கர் நகரில் சலாம் கோட் பகுதியில் வசித்து வந்த சிறுமி அனுஷா மேக்வார்

👤 Sivasankaran24 Jan 2019 5:24 PM GMT
16 வயது சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்த நபர்
Share Post

பாகிஸ்தானின் தர்பார்க்கர் நகரில் சலாம் கோட் பகுதியில் வசித்து வந்த சிறுமி அனுஷா மேக்வார் (வயது 16). இவரை அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கடத்தி சென்று முஸ்லிம் மதகுரு ஆதரவுடன் மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்து மதத்தினர் 80 சதவீதம் வசிக்கும் பகுதியில் இந்த சிறுமி வசித்து வந்துள்ளார். இங்கு இந்து விரோத குழுக்கள் தொடர்ந்து இந்துக்களை இலக்காக கொண்டு கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இது போன்ற பல இந்து மத சிறுபான்மையினரை கடந்த காலங்களில் அந்த மதகுரு மதமாற்றம் செய்து உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

அந்நாட்டில் ஆளும் கட்சியின் பிரதமர் இம்ரான் கான், இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்திற்கு கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.