Home » உலகச் செய்திகள் » 2021ம் ஆண்டின் முதல் கங்கணச் சூரியக் கிரகணம் - கனடா, ரஷ்யாவில் முழுமையாக தெரிந்தது

2021ம் ஆண்டின் முதல் கங்கணச் சூரியக் கிரகணம் - கனடா, ரஷ்யாவில் முழுமையாக தெரிந்தது

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது.

👤 Sivasankaran11 Jun 2021 12:20 PM GMT
2021ம் ஆண்டின் முதல் கங்கணச் சூரியக் கிரகணம் - கனடா, ரஷ்யாவில் முழுமையாக தெரிந்தது
Share Post

சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரியக் கிரகணம் நிகழும். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரியக் கிரகணம் நிகழும் என நாசா அறிவித்திருந்தது.

கங்கண சூரியக் கிரகணம் கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையாகத் தெரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது.

கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரியக் கிரகணம் பகுதியாக தெரிந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே சூரியக் கிரகணத்தைக் காண முடிந்தது.