Home » உலகச் செய்திகள் » 28 பேரிடம் உள்ள ஒருலட்சத்து 80-ஆயிரம் கோடி ரூபாய். உலகின் 12 ஆவது பெரிய நகரம் மும்பை

28 பேரிடம் உள்ள ஒருலட்சத்து 80-ஆயிரம் கோடி ரூபாய். உலகின் 12 ஆவது பெரிய நகரம் மும்பை

புதிய பணக்காரர்கள் உலகம்(நியூ வேல்ட் வெல்த்) என்ற அமைப்பு பணக்காரர்கள் வாழும் நகரங்கள் குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது இதில் உலக அளவில் 12-வது பணக்கார நகரமாக மும்பை மாநகரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran12 Feb 2018 7:43 AM GMT
Share Post

மும்பை மாநகரின் மொத்த சொத்து மதிப்பு 950 பில்லயன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 61 லட்சத்து 1023 கோடி உள்ளது. மும்பையில் மட்டும் 28 கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 28 பேரில் அனைவருக்கும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவே சொத்து மதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 28 பேரிடமும் சேர்த்து சுமார் ஒருலட்சத்து 79 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாகவும் இது மற்ற எந்த இந்திய நகரங்களிலும் இல்லாத ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நியூயார்க் முதல் இடத்திலும் 3 டிரில்லியன், லண்டன் 2.7 டிரில்லியன் டாலருடன் 2வது இடத்திலும், டோக்கியோ 2.5 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும், உள்ளது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பெஜ்ஜிங், ஷாங்காய், லாஸ் ஏஜென்ஸ் முதலிய நகரங்கள் உள்ளது. மேலும், மற்ற நகரங்களை காட்டிலும் மும்பை கடந்த 10 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்து வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.