Home » உலகச் செய்திகள் » 3வது நாளாக தொடரும் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம்

3வது நாளாக தொடரும் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம்

மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

👤 Sivasankaran1 Feb 2019 4:58 PM GMT
3வது நாளாக தொடரும் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம்
Share Post

மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அது சட்டமாகியது. இந்த சட்டத்தின்படி மத்திய அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்பும், மாநில அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே (வயது 81) குரல் கொடுத்து வருகிறார்.

காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார். இன்றுடன் தொடர்ந்து 3 நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.