Home » உலகச் செய்திகள் » 6 விமான நிலையங்களை மூட இந்திய அரசு உத்தரவு

6 விமான நிலையங்களை மூட இந்திய அரசு உத்தரவு

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த எப் 16 ரக விமானத்தின் மீது இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தின.

👤 Sivasankaran27 Feb 2019 10:40 AM GMT
6 விமான நிலையங்களை மூட இந்திய அரசு உத்தரவு
Share Post

எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளதை அடுத்து 14 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால், உடனடியாக 8 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரின் ரஜோரி விமானப்படை தளம் அருகே பாக்.,விமானம் குண்டுவீசி தாக்கியது. தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த எப் 16 ரக விமானத்தின் மீது இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தின. இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் 3 கி.மீ., தூரம் சென்று விழுந்து நொறுங்கி உள்ளது. இதில் பயணித்த விமானி பாராசூட் மூலம் தப்பியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு, லே, பதன்கோட், அமிர்தசரஸ், சிம்லா, கங்கரா, குளுமணாலி, பிதோராகார்க் உள்ளிட்ட 14 விமான நிலையங்கள் மூடப்பட்டன. அவற்றில் 8 விமான நிலையங்களை உடனடியாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியின் வடக்கு வான்பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காஷ்மீரில் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இதில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எல்லையில் நிலவும் பதற்றமான நிலை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.